Search for products..

  1. Home
  2. Blog
  3. How to prepare Fish Amino Acid?

How to prepare Fish Amino Acid?

by MOG, 20 Aug 2022

மீன் அமினோ அமிலம் ஓர் இயற்கை பயிர்வளர்ச்சி திரவம் ஆகும். இது பயிர்கள் நன்கு வளர மற்றும் அதிக மகசூல் பெற உதவும் அனைவராலும் தயாரிக்ககூடிய எளிமையான பொருள் ஆகும்.

தேவையான பொருட்கள்

  1. 5 கிலோ மீன் கழிவு
  2. 5 கிலோ நாட்டுவெல்லம்

செய்முறை

காற்றுப்புகாத நெகிழி வாளியில் மேற்கண்ட பொருட்களை நன்கு கலந்து பின்னர் காற்றுப்புகாதவண்ணம் மூடிபோட்டு மூடி விட வேண்டும். பின்னர் இந்தக் கலவையை அறையினுள் வைத்து விடவேண்டும். பின்னர் 30 நாட்கள் கழித்து நன்கு வடிகட்டி தெளிப்பானில் 20 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி. மீன் அமினோ கரைசலை நன்கு கலந்து பயிர்களின் மேல் தெளித்தால் பயிர்கள் வளர்ச்சி நன்கு இருப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும்.

பயன்கள்

  1. பயிர்கள் நன்கு வளர்ச்சியடையும்
  2. அதிக மகசூல் கிடைக்கும்
  3. பூச்சிவிரட்டியாகவும் பயன்படும்

Order Now:  https://myowngarden.net/myowngarden/search?q=fish%20amino%20acid

------------------------------------------------------------------------------------------------

Home

Cart

Account